பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.! ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.! ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால், பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு,ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஜனவரி 31ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், பொதுத் தேர்வு எழுத உள்ள 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பிப்ரவரி முதல் பள்ளிகளை திறக்கலாமா என பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 12ம் வகுப்பு வரை பிப்ரவரி 1ஆம் தேதிலிருந்து சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது