திமுகவின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது..டிடி.வி. தினகரன்.!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது..டிடி.வி. தினகரன்.!!

பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 11 மண்டல பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.  

ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில்,   நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும் எனவும் முறைகேடுகளை மீறி தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்போம் என்றார்.

அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தை தவறு. தைரியம் இல்லை என சொல்லாம், வார்த்தைகள் சரி இல்லை. அதிமுக-விற்கு தைரியம் இல்லை என்பது உண்மை தான் என கூறினார்.

கொரோனா பரவல் இருக்கும் நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை 1 மாதம் தள்ளி அறிவித்திருக்கலாம். இருப்பினும் நாங்கள் போட்டியிடுவோம். கொரோனா அதிகமாக இருக்கும் நிலையில் தேர்தல் நடத்துவது ஆளும் கட்சியின் இயலாமை என்றார்.

தஞ்சை மாணவி புகைப்படம் வெளியிட்டதற்கு அண்ணாமலை கைது செய்ய வேண்டும் என்ற ட்ரெண்ட் குறித்த கேள்விக்கு "எந்த அண்ணாமலை ? என கேட்டுவிட்டு" - உறுதி செய்த பின் , தவறு என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

திமுக ஆட்சி குறித்த கேள்விக்கு, 6 மாதம் ஆட்சிக்கு பிறகு அவர்கள் வேலைகளை ஆரம்பித்து விட்டனர். அவர்களின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது. கவிஞர் வைரமுத்து கவிதையை அடிக்கோள் காட்டி திமுக ஆட்சியை விமர்சனம் செய்து இதை மக்கள் உணர்வார்கள் என தெரிவித்தார்.