தலைக்கேறிய போதையில் தள்ளாடியபடி வந்த வாலிபர்..தண்ணீர் ஊற்றி தெளிய வைத்து அனுப்பிய போலீஸ்.!!

தஞ்சாவூரில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரின், தலையில் தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைத்து அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தலைக்கேறிய போதையில் தள்ளாடியபடி வந்த வாலிபர்..தண்ணீர் ஊற்றி தெளிய வைத்து அனுப்பிய போலீஸ்.!!

தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை  போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மதுபோதையில் தள்ளாபடியே இருசக்கரவாகனத்தில் வந்த நபரை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவரது தலையில் தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைத்த போலீசார், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ இணையத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.