நூற்றாண்டு விழாவில் அதிமுகவினர் பங்கேற்காதது  அவர்களின் நிலைப்பாடு: சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் அதிமுகவினர் பங்கேற்காதது  அவர்களின் நிலைப்பாடு என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு விழாவில் அதிமுகவினர் பங்கேற்காதது  அவர்களின் நிலைப்பாடு: சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவை யின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா முடிந்தபின்னர் சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி திமுக கொறடா கோவை செழியன் ஆகியோர் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநயகர் அப்பாவு,தமிழக வரலாற்றிலேயே இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் எனவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா சீரும் சிறப்புமாக இன்று நடைபெற்றதாகவும் தெரிவித்தார்‌.
 
மேலும் அதிமுகவினர்  விழாவில்  பங்கேற்காது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் முதல்வர் மு. க ஸ்டாலின் பெருந்தன்மையோடு அனைத்து கட்சிகளையும்  விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார் ஆனால் அதிமுக அதில் பங்கேற்காதது அவர்களுடைய நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.