தமிழ்நாட்டில் 4 முதலமைச்சர்கள் இல்லை.. ஆலோசனை கூறும் அனைவரும் முதலமைச்சர்கள் தான்..!

மாற்றுத்திறனாளிகளுக்கான 4-வது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..!

தமிழ்நாட்டில் 4 முதலமைச்சர்கள் இல்லை.. ஆலோசனை கூறும் அனைவரும் முதலமைச்சர்கள் தான்..!

மாற்றுத்திறனாளிகளின் மாநாடு:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் 4-வது மாநில மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தேர்தலுக்காக மட்டும் மாற்றுத்திறனாளிகளை தான் சந்திப்பவன் அல்ல என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை உடனடியாக செய்து தர வேண்டும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார் எனவும் குறிப்பிட்டார். 

4 முதலமைச்சர்கள் அல்ல:

மாற்றுத்திறனாளிகளுக்கான துறையை, கருணாநிதி கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார் என்றும், அதனாலயே, தானும் இந்த துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டாகவும் முதலமைச்சர் கூறினார். சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் இருப்பதாக கூறியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 முதலமைச்சர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதலமைச்சர்கள் தான் எனக் கூறினார். 

மக்கள் விரும்பும் ஆட்சி:

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றவே ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், திராவிட மாடல் ஆட்சி அனைவரும் விரும்பக்கூடிய ஆட்சியாக செயல்பட்டு வருவதாகவும், அனைத்து மக்களின் அரசாக தாங்கள் திகழ்வதாகவும் தெரிவித்தார். 

கோரிக்கை நிறைவேற்றப்படும்:

நிதி ஆதாரம், சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என்றும் அப்போது அவர் உறுதி அளித்தார்.