நிம்மதியா குடிக்க கூட வழியில்லை, போதை ஏறவில்லை - ராஜேந்திர பாலாஜி..!

நிம்மதியா குடிக்க கூட வழியில்லை, போதை ஏறவில்லை - ராஜேந்திர பாலாஜி..!

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முக்கியமாக தேர்தல் குறித்து அவர் பேசி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அண்ணா பிறந்தநாள்:

பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார்.

முதலமைச்சர் - 5 பேர்:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை பயந்து பயந்து இருந்த திமுகவினர் ஜெயலலிதா இறந்த பின்பு பயமில்லாமல் தவறுகளை செய்கிறார்கள். தற்போதைய முதலமைச்சரை சுற்றி ஐந்து பேர் கொண்ட வளையம் இருக்கிறது அவர்கள் சொல்லபடி தான் முதலமைச்சர் நடப்பதாக கூறியவர், அவர்கள் இருப்பதால் மக்கள் எளிதில் முதலமைச்சரை அணுக முடியவில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: ஆ.ராசாவை குறிவைத்த பாஜக… பின்வாங்கிய ஆ. ராசா

போதை ஏறவில்லை:

இந்த ஆட்சியில் நிம்மதியாக குடிக்க வேண்டும் என்று நினைத்தால் கூட வழியில்லை. போதை ஏறவில்லை என குடிமகன்கள் குமுறுகிறார்கள். அரசு மதுபான சரக்கு வருவதில்லை. செந்தில் பாலாஜி சரக்கு தான் வருகிறது எனக் கூறியவர், முதலமைச்சர் போட்டோ சூட் நடத்தி வருகிறாரே தவிர மக்கள் பிரச்சனைகளை கவனிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இரு தேர்தல்:

ஒரே தேர்தல் என பிரதமர் மோடி கூறி வருகிறார், நாடாளுமன்றத் தேர்தல் தனியாக வந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல் சேர்ந்து வந்தாலும் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என கூறி இருப்பது, அரசியல் வட்டத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அது, ராஜேந்திரபாலாஜி கூறியது போல இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் வருமோ என்பது தான்.