உட்கட்சி பிரச்சனைக்கு இவர்கள் தான் காரணம்…! டிடிவி தினகரன் விமர்சனம்…!

உட்கட்சி பிரச்சனைக்கு இவர்கள் தான் காரணம்…! டிடிவி தினகரன் விமர்சனம்…!

அதிமுகவின் உட்கட்சி தொடர்பான பிரச்சனைக்கு  எடப்பாடி பழனிசாமிக்கும் அமித் ஷாவுக்குமான  கூட்டணி தான் காரணம் என விமர்சதித்துள்ளர் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்.

சமீபகாலத்தில் அதிமுக உடனான கூட்டணி என்றால் தலைவனாக செயல்படுவதை விட தொண்டனாகவே பணியாற்றுவேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது அரிசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

தேசிய கட்சியான பாஜகவில் எந்த முடிவு எடுத்தாலும் மோடியாலும்இ உள்துறை அமைச்சர் அமித் ஷா  போன்ற முக்கிய உறுப்பினர்களாலுமே தான் தற்போது வரை எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிமுகவின் சில முன்னாள் அமைச்சர்கள் பாஜகவுக்கு  எதிராக பல கருத்துக்களை முன்வைத்தபோதும் பாஜகவுடனான கூட்டணி என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 இந்நிலையில் அமமுக வின் பொது செயலாளர் டிடிவி தினகரன் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைக்கு அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமி இடையே இருக்கிற கூட்டணிதான்  காரணம் என பாஜகவுக்கு எதிராக தனது கருத்துக்களை கூறியுள்ளார்.

 இதையும் படிக்க :  ஆவின் பால் பண்ணையில் பால் தட்டுப்பாடு...!!!