மார்கழி சிறப்பு - திருப்பாவை பாசுரம் 23 விளக்கம்..!

மார்கழி சிறப்பு - திருப்பாவை பாசுரம் 23 விளக்கம்..!

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் பாடப்படும் ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பாசுரம் 23 மற்றும் விளக்கம்.

திருப்பாவை பாசுரம் 23:

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு

போதருமா போலேநீ, பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

mAri malai (Thiruppavai 23 Class / Lesson) - Manirangu - Misra Chapu -  Andal - South Indian Classical (Carnatic) Music Archive: Classes / Lessons  | Lyssna här | Poddtoppen.se

விளக்கம்:

மழைக்காலத்தில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், தூக்கம் கலைந்து, தன் எல்லைக்குள் யாரும் புகுந்துள்ளனரா என்பதை அறிவது போல, கண்ணில் அணல் பறக்க, பிடரியை சிலுப்பியபடி எழுந்து வருவதைப் போல, கண்ணா, நீயும் புறப்பட்டு வருவாயாக. மணிவண்ணனே, உனது கோவிலிலிருந்து இங்கே வந்து, வேலைப்பாடுகள் அமைந்த அழகான சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களது கோரிக்கைகளைக் கேட்டு அதை ஆராய்ந்து எங்களுக்கு அருள் புரிவாயாக.