இப்படி மாட்டிகிட்டியே பங்கு.. தனியார் வங்கி கொள்ளை.. போலீசாரின் அதிரடி..!

தனியார் வங்கி கொள்ளை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கம்..!

இப்படி மாட்டிகிட்டியே பங்கு.. தனியார் வங்கி கொள்ளை.. போலீசாரின் அதிரடி..!

தனியார் வங்கியில் கொள்ளை: சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஃபெடரல் வங்கியில் நேற்று முன்தினம் புகுந்த கொள்ளை கும்பல், கத்தி முனையில் ஊழியர்களை மிரட்டி 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. 

6தனிப்படைகள்: இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வங்கியில் பணியாற்றிய முருகன் என்பவரே இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனையடுத்து, 6 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 

முக்கிய குற்றவாளி கைது: முதற்கட்டமாக இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவரும் வங்கியின் ஊழியருமான முருகனை தனிப்படை போலீசார் இன்று சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். 

மேலும் இருவருக்கு வலைவீச்சு: இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகளில், 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளளதாகவும், மீதமுள்ள நகைகள் ஓரிரு நாட்களில் மீட்கப்படும் என்றும் தெரிவித்தார். நன்கு திட்டமிட்டு இந்த வங்கி கொள்ளை நடைபெற்றிருப்பதாக கூறிய அவர், இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருவதாகவும் கூறினார்.