இந்த விஷயம் சட்ட விரோதம் அல்ல  : சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு !!

இந்த விஷயம் சட்ட விரோதம் அல்ல  : சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு !!

இலங்கை அதிபருக்கு எதிர்ப்பு

தமிழீழ விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2014ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. 

வழக்கு தாக்கல்

இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் 11 பேர் தாக்கல் செய்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது,  மாணவர்கள் ஜனநாயக ரீதியக மட்டுமே போரட்டத்தில் ஈடுப்பட்டதாக அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.  இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்.  

குற்றமில்லை

இதையடுத்து, நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், ஐந்து பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடி சட்ட நடவடிக்கையை தடுத்தல், குற்ற நடவடிக்கைகளுக்காக ஒன்று கூடுதல் ஆகியவையே சட்ட விரோதமாக கூடுதல் என கருத முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கங்கள் இல்லாமல் பொது வெளியில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதை சட்ட விரோதமாக கூடுவதாக கருத முடியாது எனவும் ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது எனவும் குறிப்பிட்ட நீதிபதி, மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.