துணைவேந்தரை எதிர்த்து ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பாக துணைவேந்தரை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

துணைவேந்தரை எதிர்த்து ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

கோவை: பாரதியார் பல்கலைக்கழகம் ஆசிரியர் சங்கம் ஆசிரியர்கள் பல்கலைக்கழக வளாகத்தின்முன்பு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நிறைவேற்றாததை கண்டித்து உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கவில்லை. ஆசிரியர் சங்கம் சார்ந்தவர்களுக்கு சிண்டிகேட் பதவி இல்லை.

ரூசா ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அதில் திறமை அற்றவர்களை நியமனம் செய்து உள்ளனர். விடுதியில் ஏழு வருடமாக வேலை செய்து வரும் வார்டன்களை மாற்றாமல் உள்ளனர். தரமற்ற உணவு வழங்கி வருகின்றனர். இது சம்பந்தமாக விடுதி மாணவிகள் ஒரு மாதத்திற்கு  முன்பு பல்கலைக்கழக நுழைவாயிலில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | திண்டுக்கல்: காணாமல் போன காலாண்டு தேர்வு வினாத்தாள்கள்.. தனியார் செல்போன் கடையில் குவிந்த ஆசிரியர்கள்..

பல்கலைக்கழக சாதகமான வகையில்  ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை விடுதியில் ஏற்படுத்தி உள்ளனர்.ஆர்ய்ச்சி மாணவர்களுக்குதொலைதூரக் கல்வியின் வரவு செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும். இரண்டரை வருடங்களாக பல்வேறு காலியாக உள்ள பதவிகளை நிறப்புவதாக உறுதியளித்த துணைவேந்தர் அந்த பதவிகளுக்கு இதுவரை பொறுப்பு பதவிகளை மட்டும் வைத்து தன் கைப்பாவையாக செயலாற்றி வருகிறார்.

சிண்டிகேட் உறுப்பினர் பதவிகளை நிறைவு செய்யாத பொழுது போராட்டம் நடத்த இருப்பதாக அறிந்து கடந்த சனிக்கிழமை அன்று அவசர அவசரமாக ராதாகிருஷ்ணன், சரளா ஆகிய இரண்டு நபர்களை சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளனர் என்று கூறி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வழியுறுத்தி சுமார் 11 ஆசிரியர்கள் உண்ணாவிரதம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய மாணவர்கள்..! ஆரணியில் ஒரு சாட்டை..!

உண்ணாவிரதம் துவங்கி அரை மணி நேரத்தில் ஆசிரியர்களிடம் துணைவேந்தர் காளிராஜ் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அழைப்பு விடுத்தனர். அதை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு பேச்சு வார்த்தை நடத்த சென்றனர்.

அந்த பேச்சுவார்த்தையில் மூன்று மாதத்திற்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர துணை வேந்தர் p.காளிராஜ் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர். இது தவறும் பட்சத்தில் அனைத்து ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டமாக நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க | 10 வயது மாணவியை வகுப்பில் வைத்து உடை கழட்ட சொன்ன அவலம்!