திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்...

திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்

திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை எம்எல்ஏவாக இருந்தவர் தோப்பு கே வெங்கடாசலம். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பெருந்துறையில் போட்டியிட்டு வென்றார். இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா கொடுத்தார்.  2016ஆம் ஆண்டும் அதே பெருந்துறை பகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார் தோப்பு வெங்கடாசலம். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
அதே மாவட்டத்தில் கே.சி. கருப்பண்ணனுக்கு பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓரங்கப்பட்டிருந்த தோப்பு வெங்கடாசலம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானவுடன் தனது ஆதரவாளர்களுடன் அவரை சந்தித்து பேசினார்.
அப்போதும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கருப்பண்ணனுடன் மோதல் போக்கு தொடர்ந்து இருந்துவந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த அவர் பெருந்துறையில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதிமுக தலைமையும் அவரை கட்சியை விட்டு நீக்கியது. இதனால்  அதிமுக மீது கடும் கோபமடைந்த தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
 
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்றைய தினம் தோப்பு கே வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்.