பலஆயிரம் ஏக்கர் கருப்பு பன்னீா் திராட்சை.. விளைச்சல் பாதிப்பால் விலை பல மடங்கு உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தேனி மாவட்டம் கம்பத்தில் விளைச்சல் பாதிப்பால் கருப்பு பன்னீர் திராட்சையின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

பலஆயிரம் ஏக்கர் கருப்பு பன்னீா் திராட்சை.. விளைச்சல் பாதிப்பால் விலை பல மடங்கு உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான சின்னமனூர் ஓடைப்பட்டி,  கூடலூா், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கருப்பு பன்னீா் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,  கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் திராட்சை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.போதிய வரத்து இல்லாததால் கிலோ 30 ரூபாய்க்கு விற்ற திராட்சைப் பழங்கள்  100 ரூபாய் கடந்து மொத்த விலைக்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இதனால் திராட்சை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே,  திராட்சை பழங்கள்  வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.