கார்களை வாடகைக்கு எடுத்து அடகு வைத்து சூதாடிய 3 பேர் கைது....16 கார்கள் பறிமுதல்....!!

ராமநாதபுரம் மாவட்டம் அருகே அடுத்தவர்களிடம் இருந்து கார்களை வாடகைக்கு எடுத்து, அடமானம் வைத்தும் விற்றும்  சூதாடிய  மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கார்களை வாடகைக்கு எடுத்து அடகு வைத்து சூதாடிய 3 பேர் கைது....16 கார்கள் பறிமுதல்....!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சுவாமி கோவில் தெருவை சேர்ந்த முனியசாமி, மற்றும் ஒப்பிலானை சேர்ந்த முகமது  யாசின் உள்ளிட்டவர்களிடம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, கார்த்திக் மற்றும் இளையராஜா ஆகியோர் வாடகைக்கு கார் எடுத்துச் சென்றுள்ளனர்.

வாடகைக்கு எடுத்த கார்களுக்கு முழுமையான பணம் தராமல் மூன்று பேரும் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அதனைதொடர்ந்து கார்களை வாடகைக்கு கொடுத்த முனியசாமி என்பவர் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், கார்களை வாடைக்கு எடுத்து பணம் தராமல் ஏமாற்றி வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் முனியசாமி, முகமது யாசின் ஆகியோரை ஏமாற்றியது மட்டுமட்டுமல்லாமல்,மேற்க்கொண்டு 19 பேரிடம் வாடகைக்கு கார்களை எடுத்து அடமானம் வைத்தும், விற்றும் சூதாடியது தெரியவந்தது.

மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், சுப்பிரமணி, கார்த்திக், இளையராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 16 கார்களையும் பறிமுதல் செய்தனர்.