அமைச்சரின் கார் மீது காலணி வீசிய வழக்கு : மூன்று பெண்களுக்கு ஜாமின் இல்லை !!
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில், பாஜகவினர் 6 பேர் ஜாமின் வழங்கப்பட்டது.

கார் மீது காலணி வீச்சு
காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க : கண்ணியத்தோடு நடத்துங்கள் : ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் !!
கைது
இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, அமைச்சர் மீது காலணி வீசியதாக, தனலட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரையும் அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
ஜாமின் இல்லை
இந்த மனுக்கள் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் சந்தானகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனலட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. அதே சமயம், மற்ற ஆறு பேருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தனலட்சுமி உட்பட 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.