சமூகவலைதளங்களில் ஆபாசமாக பேசிய டிக்டாக் திவ்யா கைது...

சமூகவலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய டிக் டாக் திவ்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆபாசமாக பேசிய டிக்டாக் திவ்யா கைது...

தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் மகள் திவ்யா டிக் டாக் செயலியில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து பிரபலமான இவர், அந்த செயலி முடக்கப்பட்டதும் தொடர்ந்து யூடியூப் சேனல் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். 

இந்நிலையில், டிக் டாக் செயலியில் விடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த தேனி அருகே நாகலாபுரத்தைச் சோந்த ராஜூ மகள் சுகந்தி என்பவர், தன்னையும், தனது குடும்பத்தினரையும் குறிப்பிட்டு திவ்யா சமூக வலைதளத்தில் ஆபாசமாகவும், அவதூறாகவும் விடியோக்களை பதிவேற்றம் செய்து வருவதாக கடந்த ஆகஸ்ட்14ம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தாா்.

இந்த நிலையில்  காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரேவின் உத்தரவின்பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, காவல் ஆய்வாளர் அரங்கநாயகி தலைமையில் தனிப்படை அமைத்து திவ்யாவை தேடி வந்தனர்.

இதனையடுத்து நாகப்பட்டினத்தில் தான் இருப்பதாக சமூக வலைதளத்தில் திவ்யா வீடியோ பதிவேற்றம் செய்ததால், அவரை தனிப்படை போலீசார் தேடிச் சென்று, நாகூரில் கைது செய்து தேனிக்கு கூட்டி வந்து விசாரணை நடத்தினர். பின்னர், தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திவ்யா, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.