இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மீது ஏறி இறங்கிய டிப்பர் லாரி- பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மீது டிப்பர் லாரி ஏறி இறங்குவது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மீது ஏறி இறங்கிய டிப்பர் லாரி- பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் அருகே உள்ள பாரக்கன்விளை பகுதியை சேர்ந்தவர் சஜின். ஆட்டோ ஓட்டும் தொழிலாளரான இவர், நேற்று ஹெலன்நகர் பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

திரும்பி வரும் போது இனையம்தோப்பு திருப்பு பகுதியில் வைத்து சஜின் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. அந்த நேரத்தில் எதிரே பாறை கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி சஜினின் மேல் ஏறி இறங்கியதில் அவரது கால் துண்டிக்கப்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் சஜினை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்த பதைபதைக்கும்  சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.