கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்..!

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது, பழமையான சக்ரபாணி சுவாமி கோயில். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலில், பங்குனி திருவோணத்தை முன்னிட்டு,  சக்ரபாணி சுவாமிக்கும், விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர்.  பின்னர் கொடிமரம் அருகே மாலை மாற்றும் வைபவமும், நலுங்கு வைத்தல் நிகழ்வும், நடைபெற்றது.  தொடர்ந்து அக்னி வளர்த்து பட்டாட்சார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கல இசையுடன், பங்குனி திருவோண திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.  இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.