உதகை மலர்க் கண்காட்சியை காண குவியும் சுற்றுலா பயணிகள். வேளாண்மை பல்கலை கட்டிடம் சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு!

உதகை மலர்க் கண்காட்சியில் ஒரு லட்சம் கொய் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கட்டிடம் மழை காற்றின் காரணமாக சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உதகை மலர்க் கண்காட்சியை காண குவியும் சுற்றுலா பயணிகள். வேளாண்மை பல்கலை கட்டிடம்  சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது .நாள்தோறும் இந்த மலர் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பூங்காவில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மலர் கண்காட்சியில் ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு 15 அடி உயரமும் , 50 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கட்டிடம் மாதிரி வடிவம்  திடீரென சரிந்து விழுந்தது.

முன்னதாக  அலங்கார வடிவமைப்பு முன்பு புகைப்படம் எடுத்த  சுற்றுலா பயணிகள் உடனடியாக அந்தப் பகுதியில் இருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக   உயர்தப்பினர்.

உதகையில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் மழை பெய்து வருவதால் இந்த மலர் அலங்காரம் வைக்கப்பட்டுள்ள புல் மைதானம் சேறும் சகதியுமாக காணப்பட்டது .அதிக காற்றின் காரணமாக மலர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த அலங்காரம் சரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சரிந்து விழுந்த மலர் அலங்கார வடிவத்தை பூங்கா ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.