விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கு : 3 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் !!

சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கில், காவல் உதவி ஆணையர் மற்றும் 2 காவல் ஆய்வாளர்கள் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கு : 3 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் !!

சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கடந்த மாதம் 18 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த குற்றஞ்சாட்டினால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், ஊர்க்காவல்படையை சேர்ந்த தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். 

மேலும் விக்னேஷின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது அதன் பின்பு விக்னேஷின் உடலில் 13 இடங்களில் தாக்கிய காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை மருத்துவ அறிக்கையும் வெளியானது.

இதனை தொடர்ந்து சிபிசிஐடி நடத்திய விசாரணையில் விக்னேஷ் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்ததையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து காவலர் பவுன்ராஜ், ஊர்காவல்படையை சேர்ந்த தீபக், தலைமை காவலர் எழுத்தர் முனாப், குமார், சந்திரகுமார்ழ் ஜெகஜீவன் ஆகிய 6 பேரை சிபி சி ஐடி போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ஏற்கனவே தேசிய மனித உரிமை ஆணையம் விக்னேஷ் வழக்கு தொடர்பாக நான்கு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தென் மண்டல காவல் துறைக்கு மாற்றம் செய்தும்,
அயனாவரம் உதவி ஆணையர் சரவணன்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்தும், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.