திருச்சி : வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்...!

திருச்சி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள கரையோர மக்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிவாரண பொருட்களை வழங்கினார்.

மேட்டூர் அணையில் இருந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு, நீர் வரத்தானது வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீரானது இரு கரைகளை தொட்டவாறு செல்கின்றன.

இதன் காரணமாக, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் நிர்வாகம் சார்பில் நம்பர் ஒன் டோல்கேட் அருகே கரையோர பகுதியில் குடியிருக்கும் வாழவந்தபுரத்தை சேர்ந்த பொது மக்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த பகுதிக்கு நேரில் வந்த, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாம் மற்றும் முன்னேற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் திருமண மண்டபத்தில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, பால், பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கினார்.