அமைச்சரின் பிறந்தநாள் பேனரால் பிரச்சனை... கிழிந்து காற்றில் பறப்பதால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்...

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் அமைச்சர் பிறந்தநாளிற்கு வைக்கப்பட்ட பேனர் காற்றில் கிழிந்து பறப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படகூடும் என சமூக  வலைத்தளங்களில் வைரல் வீடியோ பரவி வருகின்றது.

அமைச்சரின் பிறந்தநாள் பேனரால் பிரச்சனை... கிழிந்து காற்றில் பறப்பதால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்...

புதுச்சேரியின் உள்துறை அமைச்சராக இருப்பவர் நமசிவாயம். இவர் 8 ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பேனர் வைக்க தடை இருந்தபோதிலும், அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு ஆள் உயர பேனர்களை வைத்து வருகின்ற்னர். மேலும் அவரை பல்வேறு கோணங்களில் ஹீரோக்களாக சித்தரித்து பேனர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் வில்லியனூர் பகுதி புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்படுள்ள பேனர் ஒன்று காற்றின் காரணமாக பிய்த்துக்கொண்டு பறந்தது, இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க கூடும் என அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.