மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து : ரேஷன் அரிசி மூட்டைகள் எரிந்து நாசம் !!

வந்தவாசியில் ரேஷன் கடைக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி மின்சாரக் கம்பத்தில் மோதிய விபத்தில் லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து : ரேஷன் அரிசி மூட்டைகள் எரிந்து நாசம் !!

வந்தவாசி சிவில் சப்ளை குடோனில் இருந்து 11 டன் ரேஷன் பொருட்களை லாரியில் ஏற்றிக்கண்டு  லாரி ஓட்டுனர் சுப்பிரமணி என்பவர் வந்தவாசி மீரா காதர்ஷா தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்களை இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது மீரா காதர்ஷா தெருவில் லாரி திரும்பும்போது எதிர்பாராவதமாக மின்சாரக் கம்பத்தின் மீது மோதியது இதனால் மின்சார கம்பம் இரண்டு துண்டாக உடைந்தது மேலும் மின்சாரம் உரசியதில் தீப்பொறி எழுந்து லாரியில் இருந்த அரிசி சர்க்கரை மூட்டைகள் மீது பட்டதில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக வந்தவாசி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ  ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் அதிக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடக் கூடிய இந்த இடத்தில் மின்சாரக் கம்பத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அவ்வழியாக எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ரேஷன் கடைக்கு பொருட்களை ஏற்றி வந்த லாரி மின்சாரக் கம்பத்தின் மீது மோதிய விபத்தால் மின்சார கம்பம் 2 துண்டாக உடைந்து அதில் தீப்பொறி எழுந்து லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் எரிந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.