திருச்சியில் தண்டவாளத்தில் கிடந்த லாரி டயர்கள்....! ரயிலை கவிழ்க்க சதியா? - போலீசார் விசாரணை.

திருச்சியில் தண்டவாளத்தில்  கிடந்த லாரி டயர்கள்....!   ரயிலை கவிழ்க்க சதியா? - போலீசார் விசாரணை.

திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு, கடந்த 1-ம் தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் இந்த ரயில் திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு 12.30 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர், அங்கிருந்து சென்னை செல்வதற்காக புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. 

அப்போது, பிச்சாண்டார் கோவில் ரயில் நிலையம் தாண்டி வாளாடி ரயில் நிலையம் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் நடுப்பகுதியில் இரண்டு பெரிய டயர்கள் இருந்துள்ளன. அதிவேகத்தில் வந்த கன்னியாகுமரி ரயில் டயரின் மீது ஏறியதில்  டயர் ரயிலின் சக்கரத்தில் சிக்கி அந்தப் பகுதியிலேயே ரயில் நின்றது. 

இதனால் ரயிலின் குழாய் ஓரிடத்தில் பழுதடைந்தது. நள்ளிரவு 1.05 மணிக்கு நிறுத்தப்பட்ட  ரயில்,  1.45 மணிக்கு பழுதை சரி செய்தபின்  40 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக விருத்தாச்சலம் இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை செய்து வந்த நிலையில்,...அப்பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தற்போது விசாரணை செய்து வருகின்றார். 

அதன்படி, கடந்த 31-ஆம் தேதி மேளவாளாடி ரயில்வே டிராக் அருகில் பாலத்தின் கீழ் சாலை பணியில் செய்வதற்காக ஜேசிபி மூலம் குழி தோண்டி உள்ளனர். மணலுக்கு அடியில் இருந்த ரயில்வே டிராக் சிக்னல் கேபிள் பழுதடைந்ததுள்ளதும் இதனால்  ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்றும் தெரியவந்தது.  இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து அடையாளம் தெரியாத ஜேசிபி ஓட்டுநர் மீது ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இதனை அடுத்து, மேல வாளாடில் வசிக்கும் பிரபாகரன் ( வயது 50 ) என்பவர் நான்கு நபர்களுடன் ரயில்வே காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத்  தெரிகிறது. ஆகையால் பிரபாகரனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும், அல்லது மர்ம நபர்கள் ரயிலை தவிர்க்க செய்த சதியா ? என்ற கோணத்திலும்  விசாரணை செய்து வருகின்றனர்.

தண்டவாளத்தில் ரயில் டயர் இருந்த சம்பவத்தில் ரயில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால்  ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிக்க    | 'கவாச்' சிஸ்டம் என்றால் என்ன?