போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம் என வலியுறுத்தும் டிரஸ்டர்ஸ் பைக்கர்ஸ் கிளப் இளைஞர்கள்

போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம் என வலியுறுத்தும் டிரஸ்டர்ஸ் பைக்கர்ஸ் கிளப் இளைஞர்கள்

கோவையை மையமாக கொண்டு டிரஸ்டர்ஸ் பைக்கர்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்த கிளப் தற்போது சமூக சேவைகளில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.ரத்த தானம், மாரபக புற்றுநோய், போக்குவரத்து விழிப்புணர்வை, இருசக்கர வாகன அணிவகுப்பு,  மூலம்  மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர்  முகமது ஆசிப் பேசுகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வந்த பைக் ரைடர்ஸ் 450 பேர், போக்குவரத்து விழிப்புணர்வு அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.  

மேலும் படிக்க | இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்கம் - அமைச்சர் எ.வ. வேலு பதில்

உலகிலேயே அதிகம் பேர் கலந்துகொண்ட இருசக்கர, போக்குவரத்து விழிப்புணர்வு  அணிவகுப்பு என வேர்ல்டு வைடு புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது கிளப்பில் இருந்து 50 பேர் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.விளையாட்டாக தொடங்கிய இந்த பைக் ரைடிங் தற்போது இந்தியா முழுவதும் ஒரு குடும்பத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது. இந்தியாவிலுள்ள மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடுகளை மனித நேயத்தோடு உணர்ந்து கொள்ள முடிகிறது. சமுதாயத்தின் மீது இன்றைய இளைஞர்கள் கொண்டுள்ள அக்கறையும், அவர்களின் சேவையையும் உணர்த்தும் வண்ணம் தங்களது செயல் இருப்பதாக தெரிவித்தார்.தமிழகத்தில் பைக் மீது பிரியமாக உள்ளவர்களை ஒருங்கிணைத்து, சாதி, மதம் கடந்து மனிதநேயமிக்கவர்களாக சமுதாயத்தில் மிளிர்ந்து கொண்டிருப்பதாக கூறினார்.விளையாட்டு குடும்பத்தை உருவாக்கி இருக்கிறது.