காட்டு யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு.. காட்டு யானைகளை விரட்ட மேலும் 2 கும்கிகள் வரவழைப்பு!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே டிரோன் மூலம் காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனா்.

காட்டு யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு.. காட்டு யானைகளை விரட்ட மேலும் 2 கும்கிகள் வரவழைப்பு!!

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை பகுதியை சேர்ந்தவா் ஆனந்தகுமார்,  இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீனிவாசன், விஜய் உள்ளிட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. ஆனால் காட்டு யானையை விரட்டும் பணி முடுக்கி விடப்பட்டது.

இதேபோன்று கடந்த 27 தேதி பாரம் பகுதியை சேர்ந்த  மாலு என்ற மும்தாஜ், என்பவா்  யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

அதன்படி முதுமலையில் இருந்து கூடுதலாக சங்கர், கிருஷ்ணா ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். மேலும் டிரோன் மூலம் காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.