தொகுதியை சுற்றி சுற்றி ஸ்கோர் செய்யும் உதயநிதி... ஆதங்கத்தில் அந்த பக்கமே செல்லாத மூத்த தலைவர்கள்

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வனாக அர்ஜூனின் ஆக்‌ஷனைப் போல, இருக்குன்னு தொகுதி மக்கள் உதயநிதி மேல பாசத்த கொட்ட, கட்சியோட மூத்த எம்.எல்.ஏக்கள், வயிறு எரியுதுன்னு ஆதங்கத்தோட இருக்காங்க.  இத்தனைக்கும் என்ன காரணம் வாங்க பாக்கலாம்.

தொகுதியை சுற்றி சுற்றி ஸ்கோர் செய்யும் உதயநிதி...  ஆதங்கத்தில் அந்த பக்கமே செல்லாத மூத்த தலைவர்கள்

அரிதி பெரும்பான்மையோட நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் திமுக வெற்றி பெற்ற நிலையில், முக ஸ்டாலின் அதிரடியா நிறைய திட்டங்கள அறிவிச்சாலும், அவரோட செயல்பாடுகள் மெதுவாக இருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

Image

இது ஒரு புறம் இருக்க, முதல்வன் படத்துல ஒருநாள் முதல்வரா பதவியேற்ற அர்ஜூன் ஒரே நாள்ல மக்களோட பிரச்னைகளை தீர்ப்பது போல், பேண்ட் மடித்து கட்டி தொகுதி பக்கம் கரை ஒதுங்கியுள்ளார் முக.ஸ்டாலினின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின். 

Image

கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்களை ஓரங்கட்டி, வந்த உடனேயே தேர்தலில் நின்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றியும் பெற்றார் உதயநிதி.

Image

இருப்பினும் மற்ற எம்.எல்.ஏக்களை போல நாம் இருக்க கூடாது என நினைத்து தினந்தோறும் தன்னுடைய தொகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் நிறை, குறைகளை கேட்டு வருகிறார். தலைவர்கள் கால் வைக்கக் கூட கூச்சப்படும் சாக்கடைகள் நிறைந்த பகுதிகளுக்கு கூட அசால்ட்டாக சென்று முதியோர்கள், சிறுவர்கள், இளைஞர்களிடம் ஸ்கோர் அடித்து வருகிறார் சின்ன தளபதி. 

Image

இதனை கண்ட அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் வேலை தெரியாதவனுக்கு பதவி கிடைத்தால் இப்படி தான் நடக்கும் என்ற போக்கில் கிண்டல் அடிப்பதுடன், மூத்த தலைவர்களே தங்களது தொகுதிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் நேரத்தில், உதயநிதியின் செயலால் கோபமும் அடைந்துள்ளனர். ஆளும் கட்சியினர் எது செய்தாலும், எதிர்ப்பு தெரிவிப்பது எதிர்கட்சியினரின் வேலை. 

Image

அதனை செய்து காட்டும் வகையில், சேப்பாக்கம் பகுதிக்கு செல்லும் அதிமுகவினர், ஊரடங்கால் சினிமா படப்பிடிப்பு சரிவர நடைபெறாததால் அவர் இப்படி தொகுதிக்கு வந்து சீன் போடுவதாகவும், படப்பிடிப்பு தொடங்கினால் அங்கு சென்று நடக்கத் தொடங்கி விடுவார் எனவும் கூடாரம் போட்டு மக்களிடம் புலம்பி வருகின்றனர். 

Image

எது எப்படியானாலும், உதயநிதி அண்ணா தொகுதி மக்களை சந்திப்பதோடு மட்டுமல்லாமல், ஏதேனும் செயல்முறையில் ஈடுபடுவரா? குட்டி சிங்கப்பூராக சேப்பாக்கம் தொகுதி மாறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.