கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு..!

கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்:  உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு..!

சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தின்படி, சிறப்பு தகுதி பெற்றவர்கள் மட்டுமே கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்ய தகுதி உள்ளது என   சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவமுறைகளான ஆயுஷ் மருத்துவ படிப்புகளை படித்து, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை தொடர்பான சான்றிதழ் முடித்த மருத்துவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஒலியியல் பரிசோதனைகள் செய்ய அனுமதிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் பரிசோதனையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Ultrasound scan | Pregnancy ultrasound scan | Aathi Scans and Labs

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்ள பல்வேறு சிறப்பு தகுதிகளை வரையறுத்துள்ளதாகவும், அந்த தகுதிகளைப் பெற்ற மருத்துவர்கள் மட்டுமே இந்த பரிசோதனைகளை நடத்த தகுதி உள்ளது என உத்தரவிட்டுள்ளார்.

இதையும்  படிக்க     | "இந்தியாவில் சர்வாதிகாரம் தொடங்கி விட்டது" சாக்ஷி மாலிக் காட்டம்!

How To Return To The Doctor's Office

இந்த சிறப்பு தகுதிகளைப் பெறாத மருத்துவர்கள், இச்சோதனைகளை நடத்த தகுதியில்லை எனவும், மனுதாரர் சங்க உறுப்பினர்கள் எக்ஸ்ரே, இ.சி.ஜி, உள்ளிட்ட அடிப்படை பயிற்சி மட்டுமே பெற்றுள்ளார். இதனால்,  கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட்  பரிசோதனைகள் செய்ய தேவையான தகுதியைப் பெறவில்லை என்பதால், இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள அவர்களை அனுமதிக்க முடியாது என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும்  படிக்க     | 7 வருடம் சிறுக சிறுக சேமித்த பணம்...11 வயது சிறுமி கூறிய நெகிழ்ச்சிகரமான சம்பவம்...!