போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயா்வு - அமைச்சர் சிவசங்கர்!!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு  5% வரை ஊதிய உயா்வு வழங்க அரசு தயராக உள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தெரிவித்திருக்கிறார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயா்வு  -  அமைச்சர் சிவசங்கர்!!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 13- வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும் 14 வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இந்த புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண  குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை, குரோம் பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை  நடைபெற்றது.  

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர்,போக்குவரத்துத் துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும் என்றார்.
 
மேலும்  8 %  ஊதிய உயா்வு வழங்க தொழிற்சங்கங்கள் கோாிக்கை விடுத்ததாகவும்,  5% வரை ஊதிய ஊயா்வு வழங்க  ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து நிதித்துறை அதிகாாிகளுடன் கலந்தாலோசித்து 3 வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.