சென்னையில் உறியடி திருவிழா- மக்கள் உற்சாகம்  

சென்னையில் உறியடி திருவிழா- மக்கள் உற்சாகம்   

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே கிருஷ்ணர் கோவிலில் உறியடி திரு விழா நடைபெற்றது.

தமிழக அரசு உத்தரவின்படி அனைத்து இடங்களிலும் கோவில்கள் வழிபாட்டுத் தலங்கள் என அனைத்துமே தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உரியடி திருவிழாவிற்கு காவல்துறை அனுமதி வழங்கி நடைபெற்று வருகிறது. இந்த உறியடி திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கு பெற்று மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக உரியடி திருவிழா என்றாலே கிராமப்புறங்களில் வெகு விமர்சையாக நடைபெறும் அந்த வகையில் சென்னையில் நடைபெறுவது ஆச்சரியமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இந்த திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்தது. தமிழக அரசின் உத்தரவின்படி தளர்வுகள் அனைத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும்   இந்த  திருவிழாவிற்கு அனுமதி வழங்கியது இப்பகுதி மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவிக்கின்றனர்.