உஷாரய்யா உஷாரு.... பார்க்கிங்கில் 2 சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுள் விதிகள் மீறினால் அபராத சலான் ஒட்டப்படும் - போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

உஷாரய்யா உஷாரு.... பார்க்கிங்கில் 2 சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுள் விதிகள் மீறினால்  அபராத சலான் ஒட்டப்படும் - போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்.

இதையும் படிக்க | மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே - வாழ்த்தோடு இபிஎஸ்க்கு வகுப்பெடுத்த திருமா!

இரண்டு மாதத்தில் 1267 புகார்கள்

கடந்த இரண்டு மாதத்தில் 1267 புகார்கள் வந்திருக்கிறது இதில் 90% நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்செயலி
சாலைகளில் பொதுமக்கள் ஒரு வழி பாதையில் செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, மற்றும் வாகனத்தை ரேஷ் டிரைவிங் மூலமாக இயக்குவது  என போக்குவரத்து வுதிமீறல் ஈடுபட்டால் பொதுமக்களே வீடியோ மூலமாக புகார்கள் தெரிவிக்கலாம். அதன்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆதரத்தோடு புகார் அளிக்கலாம்

குறிப்பாக போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்களின் வாகன எண்,நடைபெறும் இடம் மற்றும் காலம் ஆகியவற்றோடு கூடிய புகைப்படம் மற்றும் வீடியோவோடு புகார் அளிக்குமாறு கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை... மாநில அரசுகள் குறைக்கக் கூடாது என  மத்திய அரசு திட்டவட்டம்...!

அவதூறு பரப்பினால் - நடவடிக்கை 

இவ்வாறாக சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கும் வசதியை பழிவாங்கும் செயலுக்கு பயன்படுத்திக் கொண்டால் போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என எச்சரித்துள்ளார். மேலும் சென்னை காவல்துறையின் நடவடிக்கையை அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்கள் பதிவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.புதிய அபராத தொகை எஃபெக்ட்: 50% கீழாக குறைந்த போக்குவரத்து விதிமீறல்கள்!

3 மடங்கு அபராதம் விதிக்கப்படும் 

சென்னை போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து பல்வேறு சிறப்பு தணிக்கைகள் செய்து போக்குவரத்து விதிமுறைகளை கட்டுப்படுத்தி வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக, வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் பகுதியில் அந்தப் பகுதிக்குட்பட்ட போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்

அதில் விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள் வாகனத்தில் 500 ரூபாய்க்கு அபராதம் விதிக்கப்பட்டு சலான்கள் போக்குவரத்து போலிசாரால் ஒட்டப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

போக்குவரத்து அபராதம் உங்களுக்கு இருக்கா? எப்படி ஆன்லைனில் செலுத்துவது?-  எளிய வழிமுறைகள்! | How to Check and Pay Traffic Fines Challan Through  Online?- Simple Steps! - Tamil Gizbot

இவ்வாறாக அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள் மீண்டும் நம்பர் பிளேட்டுகளை மாற்றாமல் போக்குவரத்து போலீசாரிடம் பிடிபட்டால் 1500 ரூபாய் என்ற அளவில் மூன்று மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்

சாலைகளில் அரசு பேருந்து பொறுத்த வரை அண்ணாநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏ என் பி ஆர் கேமரா மூலமாக அதிகப்படியாக விதிமீறல்கள் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மீறி இருக்கிறார்கள் இது தொடர்பாக அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

 விதிகள் மீறினால் குறுஞ்செய்தி செல்லும் 

ஏ.என். பி.ஆர் கேமரா பொறுத்தவரை அரசு வாகனம் தனியார் வாகனம் என்றெல்லாம் பார்க்காது யார் விதிகளை மீறினாலும் உடனடியாக அபராதத் தொகை சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு குறுந்தகவலாக சென்று விடும் என்றார்.ஏ என் பி ஆர் கேமரா பொறுத்த வரை தமிழக அரசு 10.5 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இரண்டு வாரத்திற்குள் அதற்கான டெண்டர் விடப்பட்டு முதற்கட்டமாக அண்ணா சாலை,  ஈகா தியேட்டர், மற்றும்  மிண்ட் ஆகிய 3 பகுதிகளில் வர இருக்கிறது என தெரிவித்துள்ளார். குறிப்பாக 14 ஜங்ஷங்களில் 56 அதிநவீன பொருத்திய கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவையில் ஹெல்மெட் அணிந்து சென்றவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்  | traffic police fine person wore a helmet in Coimbatore

கல்லூரிக்கே தகவல்கள் கொடுக்கப்படும் 

கல்லூரி மாணவர்கள் பேருந்தில் படியில் பயணம் செய்பவரிடம் அடையாளம் கண்டு சட்ட ஒழுங்கு போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனிடையே அவர்களுடைய கல்லூரியை கண்டறிந்து கல்லூரிக்கும் தகவல்கள் கொடுக்கப்படுகிறது அடுத்தபடியாக அவர்களுடைய பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.