கோவிலை இடிக்காதீர்கள்! கோவில் சுற்றி அமர்ந்து போராட்டம்!

ஆனைபள்ளம் கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கன்னி அம்மன் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கோவிலை சுற்றி அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கோவிலை இடிக்காதீர்கள்! கோவில் சுற்றி அமர்ந்து போராட்டம்!

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்துள்ளது ஆணை பள்ளம் என்னும் கிராமம், பல்லவர்கள் காலகட்டத்தில் காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் வரும்பொழுது இங்குள்ள குளத்தில் யானைகள் தண்ணீர் அருந்தி, ஓய்வு எடுப்பதால் இந்த ஊருக்கு ஆணை பள்ளம் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல்லவர்கள் காலத்தில் இங்குள்ள ஆணை பல்லம் குளத்தின் கரையில் கன்னியம்மன் கோவில் ஒன்றை கட்டி வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் ஆனை பள்ளம் கிராமத்தை சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆடி மூன்றாவது வெள்ளி அன்று துவங்கி ஒரு வாரகாலம், பால்குடம், அன்னதானம், தீமிதி என திருவிழாக்கள் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | தவறு செய்யக்கூடிய அதிகாரிகள் தப்பிக்க முடியாது - அண்ணாமலை எச்சரிக்கை

கடந்த முன்னூறு ஆண்டு காலமாக தலைமுறை தலைமுறையாக 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபாடு நடத்தி வரும் இந்த கோவிலை குளத்தை தூர் வருவதாக கூறி உத்திரமேரூர் பேரூராட்சியின் 1வது வார்டு கவுன்சிலர் அறிவழகன் என்பவர் இந்தக் கோவிலை இடிக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த கன்னியம்மன் கோவிலில் அன்னதான மண்டபம் ஒன்று இருந்ததாகவும் அது மழை காலத்தில் இடிந்து விட்டதாகவும். இந்த நிலையில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த கோவில் அன்னதான மண்டபத்தை புனரமைப்பு பணி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | இளம்பெண் மரணம்: ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணியினர் போராட்டம்!

இந்த சூழலில் இந்த கோவிலையே இடிப்பதாக சொல்வதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த கோவிலை சுற்றி அமர்ந்து கோவிலைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்தக் கோவிலை இடிப்பதற்கு முயற்சித்தால் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு இந்த கோவிலை இடிப்பதை தடுப்பதற்கும், அன்னதான மண்டபம் கட்டுவதற்கு வழிவகை செய்யவும் வேண்டும் என்று அந்த கிராமத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் திடீர் போராட்டம்!