ஊடகத்துறையினருக்கு வரும் 6-ஆம் தேதி தடுப்பூசி முகாம்

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஊடகத்துறை மற்றும் செய்தியாளர்களுக்காக வரும் 6-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான பாலமாக விளங்கும் ஊடகத்துறையினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்களப் பணியாளர்களாக அறிவித்தார். மேலும் ஊடகத்துறையினருக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கொரோனா ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், ஊடகத்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில், இதுவரை 5 ஆயிரத்து 48 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வரும் கொரோனா தொற்று காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினர் பாதுகாப்பாக பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில், வரும் 6-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.