பா.ஜ.க.வின் நிழல் தலைவர்... அதிகார ஆணவம்... ஆளுநரின் தமிழ்நாடு கருத்துக்கு வைகோ கடும் கண்டனம்

பா.ஜ.க.வின் நிழல் தலைவர்... அதிகார ஆணவம்... ஆளுநரின் தமிழ்நாடு கருத்துக்கு வைகோ கடும் கண்டனம்

தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என்று கூறிய கருத்தை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தல்.

அளுநர் சர்ச்சைப் பேச்சு:

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்." பாரதத்தின் பகுதியே தமிழகம்" என ஆளுநர் ரவி பேசியது சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

Governor RN Ravi rushes to Delhi after DMK, allies plan to submit  memorandum to President to recall him

கண்டனம்:

ஆளுநரின் இந்த பேச்சிற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். திமுகவினர் பலரும் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும், திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும், "#தமிழ்நாடு வாழ்க!" என ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசவில்லை உளறுகிறார் - தேசியகீதத்தை எப்போது மாற்றுவார் - கீ.வீரமணி

வைகோ கண்டனம்:

இந்நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கும் கருத்துகள் விஷமத்தனமானவை.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு தி.மு.க-வை உடைத்த வைகோ - ம.தி.மு.க உருவான பின்னணி! -  Tamilnadu Now

“தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதைவிட, தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.”என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

அதிகார ஆணவம்:

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆர்.என்.ரவிக்கு எந்த அருகதையும் இல்லை. அதிகார ஆணவம் தலைக்கேறிய நிலையில், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தமிழ்நாடு மக்கள் நினைக்கவில்லை. மாறாக, எல்லாவற்றையும் திட்டமிட்டு, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா சனாதனக் கும்பல் போட்டுத் தந்த தடத்தில் நின்றுதான் ஆர்.என்.ரவி பேசிக்கொண்டு இருக்கிறார்.

மலராத மறுமலர்ச்சியும் வைகோவின் வளர்ச்சிப் பாதையும்..!- Dinamani

தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு நடைபெற்ற போராட்ட வரலாறு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ஆர்.என்.ரவிக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி விடுதலைப் போராட்டத் தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்த வரலாறு இவர் அறிந்திருப்பாரா?

தமிழ்நாடு:

1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் ஆனவுடன், 1967 ஜூலை 18 ஆம் தேதி, சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றினார். இச்சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவர் இசைவினைப் பெற்று, 1969 ஜனவரி 14 பொங்கல் திருநாளில் ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டப்பெற்று, நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாடு Vs தமிழகம் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு எதிர்வினையாக  ட்ரெண்டாகும் ஹேஷ்டேகுகள்! | Thamizhagam More Appropriate Than Tamil Nadu:  Row Over Governor RN Ravi's Remark ...

‘தமிழ்நாடு’என்று தொலைநோக்கோடு பேரறிஞர் அண்ணா அவர்கள் சூட்டியப் பெயர் தமிழ் இலக்கியங்களிலே இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு என்றால், தமிழ் மொழியை நாடு; தமிழரை நாடு; தமிழ்ப் பண்பாட்டை நாடு என்று பொருள்படும். இது வெறும் பெயர் மட்டும் அல்ல, கோடானு கோடி தமிழ் மக்களின் இரத்த நாளங்களில் கலந்திருக்கின்ற தமிழ் உணர்வுதான் ‘தமிழ்நாடு’ என்று மலர்ந்தது.

திரும்பபெற வேண்டும்:

ஆளுநர் ஆர்.என்.ரவி எல்லை மீறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. திராவிட இயக்கம் பற்றிய அவரது விமர்சனங்கள், அவர் பா.ஜ.க.வின் நிழல் தலைவர் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது. ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு’ பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று கூறிய கருத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மக்கள் வழியில் தமிழ்நாட்டு மக்களும் பாடம் புகட்டுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.