வெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் மரணம்..! தொலைபேசியில் இரங்கல் தெரிவித்த நடிகர்கள்

வெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் மரணம்..! தொலைபேசியில் இரங்கல் தெரிவித்த நடிகர்கள்

வெண்ணிலா கபடிக்குழு படப்புகழ் ஹரி வைரவன் உயிரிழந்த நிலையில், உடைந்த ஓட்டு வீட்டில் வாழ்வாதரத்திற்கு வழியின்றி நிற்கதியாய் நிற்கும் அவரது குடும்பத்தினர் நடிகர் சங்கத்தினருக்கு கோரிக்கை.

ஹரி வைரவன்:

மதுரையை சேர்ந்த நடிகரான ஹரி வைரவன் (38), வெண்ணிலா கபடி குழு-1 மற்றும் வெண்ணிலா கபடி குழு -2, குள்ளநரிக்கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் விஷ்ணுவிஷாலின்  நண்பராக கபடி குழுவில் நடித்த நடிகரான ஹரிவைரவனின் நடிப்பு அந்த திரைப்படத்தின் முக்கிய இடம் பிடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று படத்தின் வெற்றிக்கு உதவியது.

Breaking: வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் மரணம்...  கண்ணீரில் ரசிகர்கள்., சோகத்தில் திரையுலகம்.! - Tamil Spark

உடல்நலக்குறைவு:

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவர், மருத்துவமனைக்கு சிகிச்சைகாக சென்ற போது, அவருக்கு கிட்னியில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. கடந்த 10 மாதங்களாக அதற்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் காலாமானார்.

வெண்ணிலா கபடி குழு' நடிகர் ஹரி வைரவன் காலமானார் | Vennila Kabadi Kuzhu  actor Hari Vairavan dies of long term illness - hindutamil.in

குடும்பம்:

நடிகர் ஹரி வைரவனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா (30) என்ற பெண்ணுடன் திருமணமாகிய நிலையில் 2 வயதில் யோஷினிஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. நடிகர் ஹரி வைரவனின் உடலானது மதுரை கடச்சனேந்தல் முல்லைநகர்  பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ்...!காரணம் இதுதானாம்...!!

வறுமையில் குடும்பம்:

நடிகர் ஹரிவைரவனின் ஊதியத்தை வைத்து மட்டுமே குடும்பத்தை நடத்தி வந்த ஹரி வைரவனின் மனைவி தற்போது உடைந்த ஓட்டு வீட்டில் வசித்துவரும் நிலையில், வாழ்வாதரமாக இருந்துவந்த ஹரி வைரவனின் மறைவால் குழந்தையை வைத்துக்கொண்டு செய்வதறியாது நிற்கிறார். 

வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் காலமானார் - திரையுலகினர் இரங்கல் -  தமிழ்நாடு

நடிகர் சங்கத்திடம் கோரிக்கை:

தமிழ்நாடு நடிகர் சங்கம் உயிரிழந்த நடிகர் ஹரி வைரவனின் குழந்தை மற்றும் குடும்பத்தின் வாழ்வாதரத்திற்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஹரி வைரவனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Actor Hari Vairavan Death: நடிகர் 'வெண்ணிலா கபடி குழு' ஹரி வைரவன்  காலமானார்!-actor hari vairavan who became famous for the film vanilla  kabadi team passed away - HT Tamil

இரங்கல்:

நடிகர் ஹரி வைரவன் இறப்பிற்கு நடிகர்கள் விஷ்ணுவிஷால், திரைப்பட இயக்குனர்  பாலாஜி மற்றும் நடிகர்கள் அம்பானி சங்கர், பிளாக் பாண்டி உள்ளிட்ட நடிகர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.