பிற்பட்ட வகுப்பினருக்கு மானிய விலையில் வாகனங்கள்... அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்...

தாட்கோ திட்டத்தின் கீழ் SC/ST வகுப்பினருக்கு 30% மானிய விலையில் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

பிற்பட்ட வகுப்பினருக்கு மானிய விலையில் வாகனங்கள்... அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்...
தாட்கோ திட்டத்தின் கீழ் SC/ST வகுப்பினருக்கு மானிய விலையில் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயனாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆதி திராவிடர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த SC/ST வகுப்பினர் 10க்கும் மேற்பட்டோருக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் படி வாகன விலையில் 30% அரசு மானியமாகவும், 65% குறைந்த வட்டியில் கடனாக வழங்குகிறது.
 
5% வாகன விலையை மட்டுமே பயனாளர் செலுத்த வேண்டியதுள்ளதால் திட்டத்தின் பயனடைந்தவர்கள் பலர் ஆர்வமுடன் பதிவு செய்து வருவதாக ஆதி திராவிடர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் சமூக நலத்துறையின் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆய்வு கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய ஆதி திராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழை அமைச்சர் வழங்கினார்.