வேலூர் : ஆற்றங்கரையோரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி...!

பாலாற்றங்கரையோரம் 10 ஆயிரம் பனை விதைகள் பொதுமக்கள் உதவியோடு நடப்பட்டது

வேலூர் : ஆற்றங்கரையோரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி...!

வேலூர் மாவட்டம், கருகம்புத்தூரில் பாலாற்றங்கரையோரம் தற்போது மழை பெய்து தண்ணீர் அதிகம் உள்ளதால் தன்னார்வலர் தினேஷ் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் உதவியுடன் கிராம மக்களை கொண்டு 6 கிலோ மீட்டர் தூரம் வரை கரையோரம் 10 ஆயிரம் பனை விதைகளை நட்டு வருகிறார். 

இதன் மூலம் மண் அரிப்பு தடுக்கப்படுவதுடன், பாலாற்றங்கரை பலப்படுவதுடன் சுற்றுசூழலும் மேம்படும். கிராமத்தை சேர்ந்த நூற்றுகணக்கான பெண்கள், பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டனர். கடந்த ஆண்டு இதே போன்று 10 ஆயிரம் பனை விதைகள் ரங்காபுரம் பாலாற்றங்கரையோரம் நடப்பட்டு அவைகள் தற்போது வளர்ந்து நல்ல நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.