வேலூர் : " நெடுஞ்சாலைத்துறை அகற்றிய மரங்களுக்கு பதிலாக கட்டாயம் மரங்களை நடவேண்டும்.." பசுமை குழு கூட்டத்தில் ஆட்சியர் பேச்சு

வேலூர் மாவட்டத்தில் அனைத்துறையின் பங்களிப்புடன் இந்த ஆண்டு 3 லட்சம் மரக்கன்றுகளை நடவுள்ளோம் - பசுமை குழு கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு

வேலூர் : " நெடுஞ்சாலைத்துறை அகற்றிய மரங்களுக்கு பதிலாக கட்டாயம் மரங்களை நடவேண்டும்.." பசுமை குழு கூட்டத்தில் ஆட்சியர் பேச்சு

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் பசுமை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, நாம் அதிக மரங்களை நட வேண்டும் தனியார்கள் மூலம் ஒன்றரை லட்சம் மரகன்றுகள் இருப்பு உள்ளது. அனைத்துத்துறை அதிகாரிகளும் அதிக அளவு மரங்களை நடவேண்டும்.  3 லட்சம் மரங்களை நடுவதை இலக்காக வைத்து, மரங்களை நட வேண்டும்.

 

அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி பள்ளிகொண்டா- வேலூர் வரையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக கட்டாயம் மரங்களை நடவேண்டும். அதற்காக தூங்கு மூஞ்சு மரமோ அல்லது கருவேல மரங்களையோ நட கூடாது. நமது நாட்டிற்கும், தட்ப வெட்ப நிலைகளுக்கும் உகந்த மரக்கன்றுகளை மட்டுமே நடவேண்டும். அதனை அனைத்துறை அதிகாரிகளும் செய்ய வேண்டும். ஒவ்வொரு துறையின் சார்பாகவும் குறைந்த பட்சம் 2 ஆயிரம் மரங்களையாவது நடவேண்டும். அப்போது தான் சுற்றுசூழல் பாதுகாக்கப்படும் என கூறியுள்ளார்.