இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்..  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் விருதுநகர் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

23ஆம் தேதி அன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்.. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆம் தேதி அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்..  வட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது கன மழையும் இருக்ககூடும் என கணிக்கப்பட்டுள்ளது.