ரயிலில் தவறி விழுந்து உயிரைவிட்ட மாணவன்..! இறப்பதற்கு முன் ஓடும் ரயிலில் சாகசம் செய்த வீடியோ வைரல்!

ரயிலில் தவறி விழுந்து உயிரைவிட்ட மாணவன்..! இறப்பதற்கு முன் ஓடும் ரயிலில் சாகசம் செய்த வீடியோ வைரல்!

திருவள்ளூர் அருகே 2 நாட்களுக்கு முன் ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த இளைஞன், அதற்கு சில நாட்களுக்கு முன் நண்பர்களுடன் ஓடும் ரயிலில் சாகசம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பயணித்த மாநிலக்கல்லூரி மாணவன் நீதிதேவன், வேப்பம்பட்டு செல்லும் வழியில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழப்புக்கு சில நாட்களுக்கு முன்னர், சக நண்பர்களுடன் ஓடும் ரயிலின் மீது ஏறியும் நடைமேடையை காலால் உரசியவாறும் நீதிதேவன் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. போலீசாரின் எச்சரிக்கையை மீறியும் மாணவர்கள் இவ்வாறு சாகசத்தில் ஈடுபட்டு உயிரிழந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.