தனி வருவாய் கிராமமாக அறிவிக்க கோரி- சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க கோரி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனி வருவாய் கிராமமாக அறிவிக்க கோரி- சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொண்டையங்குப்பம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கொண்டையங்குப்பம் கிராமம் நல்லூர் கிராமத்தோடு இணைந்துள்ளதால், தேவையான வசதிகள் கிடைக்கவில்லை என அக்கிராமத்தினர் குற்றம்சாட்டினர்.இதனையடுத்து தங்கள் கிராமத்தை நல்லூர் கிராமத்தில் இருந்து பிரித்து தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆனால்  இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அதிகாரிகளை கண்டித்து   சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தி  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.  இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. எனினும் இந்த மறியலால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.