'மன் கி பாத்' நிகழ்ச்சிக்கு போகாதது ஒரு குத்தமா...?

'மன்  கி பாத்'                                                  நிகழ்ச்சிக்கு போகாதது ஒரு குத்தமா...?

மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சியான  பிரதமரின் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியின் 100 -வது  நிகழ்ச்சி தொகுப்பு கடந்த ஏப்ரல் 30 அன்று ஒலிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது வெகு விமரிசையாக நிகழ்த்தப்பட்டது. 

இந்நிலையில்,  சண்டிகரில் உள்ள முதன்மை சுகாதார நிறுவனமான முதுகலை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) நடைபெற்ற  'மன் கி பாத்' 100-வது எபிசோட்  நிகழ்ச்சியினை  36 மாணவிகள் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. 

அதாவது,  28 மூன்றாம் ஆண்டு மாணவிகள் மற்றும் எட்டு முதலாம் ஆண்டு மாணவிகள் என மொத்தம் 36 மாணவிகள் இந்த நிகழ்வைத் தவிர்த்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் சார்பாக நிகழ்ச்சிக்கு  கட்டாயமாக மாணவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை. இதனால் அந்த நிர்வாகம் சார்பாக அந்த மாணவிகளுக்கு ஒரு வார காலம் முழுவதும், விடுதியை விட்டு  வெளியே செல்ல  அனுமதி மறுக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த செயலுக்கு கண்டனம்  தெரிவிக்கும் விதமாக விருதுநகர் எம்.பி.யான மாணிக்கம்  தாகூர் 
பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'மன் கி பாத்'  நிகழ்ச்சியை தவிர்த்ததற்காக  36  மாணவர்கள் வெளியில் செல்லகூடாது என விதித்த தடையை திரும்பப்பெறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க    } அடுத்தடுத்து மாற்றம்...எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!