கிழக்கு, மேற்கு கால்வாயில் தேங்கிக் கிடக்கும் கழிவுகள்... கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்...

மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கிழக்கு, மேற்கு கால்வாயில் தேங்கிக் கிடக்கும் கழிவுகள்... கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்...
சேலம் மாவட்டம் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் மூன்று மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது  குறிப்பிடதக்கது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும். பாசன பகுதியில் பெய்யும் மழையின் அளவை பொறுத்து நீர் திறப்பு இருக்கும்.  
 
இந்நிலையில், கிழக்கு, மேற்கு கால்வாய் குப்பை கொட்டும் தொட்டியாகவும், கழிவுகள் செல்லும் சாக்கடையாகவும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கால்வாய் முழுவதும் ஆங்காங்கே குவியல், குவியலாக குப்பை  கழிவுகளுடன் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.  இதனால்  நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது பொதுப்பணித்துறை  அதிகாரிகள் இது குறித்து  உடனடியாக கழிவுகளை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.