சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கிறோம் -  அமைச்சர் கே.என். நேரு 

நகராட்சி மாநகராட்சி சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.

சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கிறோம் -  அமைச்சர் கே.என். நேரு 

ஆய்வுக் கூட்டம்

வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவைகள் நடைபெறும் திட்டபணிகளின் நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோரும் பல்வேறு நகராட்சி மற்றும் பேரூராட்சி வேலூர் மாநகராட்சி உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் தலைவர்களும் மண்டலதலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர் இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகளை விரைந்து முடித்து சாலைகள் சீரமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கால அவகாசம்

பின்னர், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேசுகையில், பொறுமையாக இருந்து வேலையை முடிக்க வேண்டும் மீண்டும் ஒப்பந்தவிட்டால் விலை அதிகரிக்கும் இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் கடை வாடகை பாக்கி செலுத்த காலம் அவகாசம் அளிக்க வேண்டுமென வணிகர்கள் கோரிக்கை குறித்து கேட்டபோது அதெல்லாம் கொடுக்க முடியாது எல்லா இடத்திலும் வாடகை பாக்கி செலுத்த அவகாசம் அளிக்க முடியாது காரணம் நகராட்சிகளில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட பணமில்லாமல் இருக்கிறது சிரமங்கள் உள்ளது.

இருந்தாலும் வியாபாரம் செய்பவர்கள் வாடகை பணம் கொடுத்ததான் ஆக வேண்டும். இதுகுறைவான வாடகை செலுத்தியாக வேண்டும் மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் தனியார் ஒப்பந்தம் மூலம் குப்பை அகற்றுவதை சிறப்பாக செய்கின்றனர். ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியில் நடைபாதை மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் எல்லாம் செய்யவுள்ளோம்.

பேருந்து நிலையம்

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடுக்கிவிட்டுள்ளோம் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகளும் நடந்து வருகிறது. ஜுன் 2023க்குள்ளாக பணிகளை முடிக்க கூறியுள்ளோம் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்காக புதிய கருவிகள் ரூ.25 கோடி மதிப்பில் முதல்வர் நிதி ஒதுக்கி வழங்கவுள்ளார். வாணியம்பாடி பேருந்து நிலையம் நகரத்திற்குள் கொண்டுவரபடும் என்று கூறினார். முன்னதாக அமைச்சர் நேரு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிஞ்சி ஏரியில் நடைபாதை அமைத்தல் உள்ளிட்டவைகளுக்காக நடக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.