”பொறுப்பை பொதுமக்களிடமே விட்டு விடுகிறோம்....” சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!!

”பொறுப்பை பொதுமக்களிடமே விட்டு விடுகிறோம்....” சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அனுமதி அளிக்கவில்லை:

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன் லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதற்கான நிரந்தர சட்டத்திற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.  மாறாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ளார்.  ஆனால், அதற்கான காலவரையறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஆளுநரிடமிருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

காரணம் என்ன?:

இந்த விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன் என்பது ஆளுநருக்கே வெளிச்சம் என்று அவர் தெரிவித்துள்ளார்.   தொடர்ந்து பேசிய அவர், சட்டம் காலாவதி ஆகிவிட்டதால் ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில்தான், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.  அதே நேரத்தில், ஆன் லைன் ரம்மி விவகாரத்தில் உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதை பொதுமக்களிடமே விட்டு விடுகிறோம் என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்படுகிறதா இந்தியா...ராகுல் காந்தி கூறுவதென்ன?!!