பெட்ரோல், டீசலின் விலையை குறைத்து மக்களின் துன்பத்தை போக்க வேண்டும்... வானதி சீனிவாசன் வலியுறுத்தல்...

தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைத்து மக்களின் துன்பத்தை போக்கவேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசலின் விலையை குறைத்து மக்களின் துன்பத்தை போக்க வேண்டும்... வானதி சீனிவாசன் வலியுறுத்தல்...
பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம்  பொள்ளாச்சி தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 
செற்குழுகூட்டத்தில் வானதி சீனிவாசன் பேசியதாவது :
 
மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வழங்குகிறது மாநில அரசுகள் மத்திய அரசை விட வரியை அதிகமாக விதித்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது.
 
பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதுதான் பா.ஜ.க. வின்யின் நிலைப்பாடு ஜிஎஸ்டியில் கொண்டு வந்தால் வரி குறையும் மாநில அரசு வரி வருவாய்க்கும் ஜிஎஸ்டி கொடுக்கலாம்.
 
ஒரிசா போன்ற மாநிலங்களில் வரி குறைக்கப்பட்டு பெட்ரோல் டீசல் விலையை குறைத்து வழங்குகிறது. தமிழகத்தில் மக்களின் துன்பத்தை குறைக்க வேண்டும் என்றால் மற்ற மாநிலங்களைப் போல திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றும் வகையில் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் விலையை குறைந்து வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 
இதனையடுத்து செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது :
 
சட்டப்பேரவை தேர்தலில் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிப்போம் என்ற வாக்குறிதியை நிறைவேற்ற வேண்டும். மேலும் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார் அதனையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.