'ஒன்றிய அரசு'னு சொன்னா 'பாரத பேரரசு'னு சொல்லுவோம்.... குஷ்புவின் சர்ச்சை ட்வீட்

மத்திய அரசை “பாரத பேரரசு” என்றே அழைப்போம் என நடிகை குஷ்பு ட்வீட் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஒன்றிய அரசு'னு சொன்னா 'பாரத பேரரசு'னு சொல்லுவோம்.... குஷ்புவின் சர்ச்சை ட்வீட்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறி ட்விட்டரில் பதிவிட்டார்.  அவ்வபோது சமூகவலைத்தளங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் குஷ்பு. 

இந்நிலையில் ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்குஷ்பு.

அதில், மத்திய அரசை ஒன்றிய அரசு என தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது. 

தமிழ்நாட்டில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைத்தால், நாம் பாரத பேரரசு என்று அழைப்போம், என பதிவிட்டுள்ளார்.  மேலும் தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி  வாழ்க பாரத தேசம் வாழ்க தமிழகம் என கூறி உள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.