அப்பாடா... தக்காளி விலை குறைந்து விட்டதாம்.. இன்றைய விலை என்னென்னு தெரியுமா?

சென்னை - கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அப்பாடா... தக்காளி விலை குறைந்து விட்டதாம்.. இன்றைய விலை என்னென்னு தெரியுமா?

சமீப நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, 100 ரூபாயை கடந்து விற்பனையானது.

நேற்றைய நிலவரப்படி ஒருகிலோ தக்காளி 80 ரூபாய் முதல் 85 ரூபாய் வரை மொத்த சந்தையில் விற்பனை ஆன நிலையில், வெளி சந்தைகளில் இதன் விலை மேலும் அதிகரித்து, ஒரு கிலோ 90 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்கப்பட்டது.

ஏற்கனவே அனைத்து பொருட்களின் விலை உயர்வால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, தக்காளி விலை மேலும் ஒரு இடியாக அமைந்திருந்த நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளது.

நேற்று கோயம்பேடு காய்கறி சந்தையில் 90-ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய் குறைந்து 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.