கூவத்தூரில் அடிமைகளாக இருந்தீர்களா..? எடப்பாடிக்கு செந்தமிழன் காட்டமான கேள்வி...

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என்றால் கூவத்தூரில் அடிமைகளாக இருந்தீர்களா என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் கேள்வி?

கூவத்தூரில் அடிமைகளாக இருந்தீர்களா..? எடப்பாடிக்கு செந்தமிழன் காட்டமான கேள்வி...
சுதந்திர போராட்ட தியாகி இரட்டைமலை சீனிவாசன் 162-வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் :
 
அதிமுகவில் நவக்கிரக தலைவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே தங்களுக்குள் கருத்து வேறுபாடு உடையவர்கள்.  எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறார். ஆனால் முன்னாள் அமைச்சர்
சி.வி.சண்முகம் பாஜக கூட்டணி வைத்ததால் தான் தேர்தலில் தோற்றோம் என்கிறார். இதுவே முரணாக உள்ளது என்றும், அதிமுகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து இருந்தாள் அம்மா ஆட்சி அமைந்து இருப்பது உறுதி என்றும்,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகுவது குறித்து கேட்டபோது கட்சியில் சேர்வது கட்சியிலிருந்து கட்சிக்கு தாவுவது இதெல்லாம் அரசியலில் இயல்பான ஒன்றுதான் என்று பதில் அளித்தார்.
 
மேலும், அதிமுகவிற்கும், சசிகலாவிற்கு சம்பந்தமில்லையென எடப்பாடி பழனிச்சாமி பேச அறுகதை கிடையாது. அப்படி என்றால் கூவத்தூரில் விடுதியில் முன்னாள் அமைச்சர்கள் அடிமைகளாக இருந்தனரா என கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் அமைச்சர்கள், எம்எல்ஏகள் அனைவரும் சசிகலா பெயரை உச்சரித்து தான் பேசினார். இது இன்றும் அவை குறிப்பில் உள்ளது. சசிகலாவிற்கு அதிமுகவுடன் தொடர்பில்லையென பேசுவது நகைச்சுவையாக உள்ளது.
 
சசிகலா  டிடிவி தினகரன் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என  ஊடகங்களின் தவறான செய்திகள் பரவி வருவதாகவும் ஒருநாள் தொடர் முடிந்தவுடன் சசிகலா அவர்கள் அறிவித்துள்ள சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் பெரும் திரளாக அவருக்கு ஆதரவு அளிப்பார்கள் எனவும் கூறினார்.