"நான் என்ன பிரதமரா' எனக்கேட்ட பப்ஜி மதன்,.. 'நீ குற்றவாளி' என்ற காவலர்.! காலில் விழுந்தும் அடங்காத திமிர் பேச்சு.! 

"நான் என்ன பிரதமரா' எனக்கேட்ட பப்ஜி மதன்,.. 'நீ குற்றவாளி' என்ற காவலர்.! காலில் விழுந்தும் அடங்காத திமிர் பேச்சு.! 

பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தவர் மதன்.இவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.இதனையடுத்து பப்ஜி மதனை கைது செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு 2 புகார்கள் வந்தது.மேலும் தமிழகம் முழுவதும் 160க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் பப்ஜி மதன் மீது ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து மதனை தேடி வந்தனர்.வி.பி.என் செர்வரை பயன்படுத்தி தொடர்ந்து மதன்  தலைமறைவாக இருந்து வந்தார்.இந்த நிலையில் பெருங்களத்தூர்,சேலம் போன்ற பகுதிகளில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்த போது  மதனின் மனைவி கிருத்திகாவை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.மதனின் யூடியூப் சேனலுக்கு அட்மினாக கிருத்திகா இருந்து வந்தது  தெரியவந்தது.மேலும் மாதம் 10லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து 2 சொகுசு கார்கள்,2 பங்களாக்கள் வாங்கியது தெரியவந்தது.மேலும் மதனின் நெருக்கமானவர்களின் விவரங்களும்,செல்போன் எண்களும் பெறப்பட்டது. இதனையடுத்து உடந்தையாக இருந்ததாக  மதனின் மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த மதன் தர்மபுரியில் உறவினரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.இதனையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து பப்ஜி மதனை கைது செய்தனர்.அவரிடமிருந்து டேப்பை பறிமுதல் செய்தனர்.இதனையடுத்து மதனை சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு சோதனை நடத்தினர்.

இதனையடுத்து கைது செய்த மதனை  சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.அப்போது போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற போது வீடியோ எடுப்பதை பார்த்து நான் என்ன பிரதமரா என கேட்டார்.அதற்கு மதனை அழைத்து சென்ற காவல் ஆய்வாளர் "நீ குற்றவாளி வா" என அழைத்து சென்ற சம்பவம் அரங்கேறியது.மதனிடம் ஆபாச பேச்சு வீடியோ குறித்தும்,வீடியோவில் பேசக்கூடிய தோழிகள் குறித்தும் விசாரணை செய்ய உள்ளனர்.மேலும் பணப்பறிப்பில் மதன் ஈடுபட்டுள்ளாரா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.விடிய விடிய மதனிடம் விசாரணை நடத்தி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்திருப்பதாக மத்திய குற்றபிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.